24 ஜன., 2009

இசையின் புயல்

"சொட்டு நீலம் டோய்..." என்ற அந்த ஒரு நிமிடதி்ற்கும் குறைவாக ஒலித்த விளம்பரப் பாடல், கேட்டபடி நடந்து செல்வோர் அனைவரையும் வயது வேறுபாடின்றி ஒரு கணம் நிற்கவைத்தது. அது நடந்து இன்று இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் இருக்கலாம். அன்று தமிழ் நாட்டு மக்களை நிற்க வைத்தவர், அறுபது கோடி இந்தியரையும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் எண்ணற்ற இசை ரசிகர்களையும் நிற்க வைக்கும் நிலைக்கு வந்து விட்டார். தமிழ் நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பால் அவர் எட்டிய உயரம் சாமானியமானதல்ல. .இத்தனைக்கும் நான் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்று அடங்கிக் கொள்ளும் பண்பு அவரது ஆளுமையின் அழகு. எத்தனை , பரிசுகள் பட்டங்கள் தேடிவந்தாலும் , என் கடன் இசை அமைப்பதே என்றவாறான தோற்றம்.. தமிழ் மக்களின் ஆசிகளால் அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து இசையால் உலகின் காயங்களை ஆற்ற வேண்டும்.

1 கருத்து:

  1. ஆம்.காயங்கள்,ஓலங்கள்,அவலங்கள்,கூக்குரல்கள்,ஒப்பாரிகள்,வேதனைகள்,ஏக்கங்கள்...இவைகள் எல்லாம் இல்லாது போய் போர் முனைகளில் எல்லாம் இசை மழை பொழியட்டும்.மனங்கள் எல்லாம் மகிழ்வால் நிரம்பட்டும். சாந்தி எங்கும் நிறையட்டும்.

    பதிலளிநீக்கு