15 ஜன., 2009

Slumdog Millionaire

எனக்கு நிறைய இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் சிலர் தமிழ் நாட்டிலும் பலர் அதற்கு வெளியேயும் பிறந்தவர்கள். அனைவருமே கடின உழைப்பும், சுய முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும் கொண்டவர்கள். பிரகாசமான ஒரு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிகழ்காலம் தரும் மன, உடல் கஷ்டங்களை மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொள்பவர்கள். பரஸ்பர மரியாதையுடன் பழகக்கூடியவர்கள். பல நண்பர்கள் தீவிரமான அறிவுத்தேடலும் சமுக மாற்றத்தில் கடுமையான அக்கறையும் உண்மையாகவே மனசில் நிரம்பப் பெற்றவர்கள். . "ஏழைக்கு சோறிடாத சமயம் பக்தனுக்கு மோட்சத்தை தர முடியாது" என்று சூழுரைத்த விவேகானந்தரையும், வினோபா பாவேவையும், மஹாத்மா காந்தியையும், ஜெயப்பிரகாஷ் நாராயணையும் தந்த நாடு இந்தியா. உலகம் வியத்த விஞ்ஞானிகளையும், தத்துவ ஞானிகளையும் புரட்சியாளர்களையும் அது தோற்றுவித்தது. அந்த மண் தந்த மகான்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மாளாது. படம் பார்த்து வெளியே வந்தபோது இந்திய அரசியல்வாதிகள் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் எனது இந்திய நண்பர்கள் மீதும் எனக்கு ஏற்பட்ட கோபத்தையும், அதன் விளைவாக வந்த அழுகையையும் அடக்க முடியவில்லை.. ஏழை இந்தியனாய் பிறந்தால் ஏன் இத்தனை அவலம்? மாற்றுவோர் இங்கே இல்லையா?

3 கருத்துகள்:

  1. இந்தப் படத்தைப் பற்றிய முழு விமர்சனத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக மிக சந்தோசம் ஜெய்..!
    தொடர்ந்து உங்களது கருத்தாக்கங்களை படிக்க ஆவாலாக இருக்கிறேன்...

    அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை..
    "ஏழை இந்தியனாய் பிறந்தால் ஏன் இத்தனை அவலம்?
    மாற்றுவோர் இங்கே இல்லையா?"

    ஏன் இல்லை..? நிறைய பேர் வந்துபோய் இருக்கிறார்கள்..
    ஆனால் நாய் வால் போல திரும்ப திரும்ப வளைந்துகொண்டே இருக்கிறது..
    ஒரு நாள் நிமிரும்..

    - இர.ஜெ.பிரேம்குமார்

    பதிலளிநீக்கு
  3. ஒரு தேசத்தின் சொத்து எவ்வாறு அதிகாரத்தில் உள்ளவர்களாலும் அரசியல்வாதிகளாலும் சூறையாடபபடுகிறது என்பதை அறிய வேண்டுமா?

    http://www.frontlineonnet.com/fl2601/stories/20090116260112800.htm

    பதிலளிநீக்கு